image

தேசிய போதையூட்டும் ஒளடதங்கள் ஆய்வுகூடம் (NNL)

இலங்கையில் போதையூட்டும் ஒளடத துஷ்பிரயோக கட்டுப்பாடும் தடுப்பும் பற்றிய தேசிய கேந்திர மையமான தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் கீழ் இயங்கும் தேசிய போதையூட்டும் ஒளடதங்கள் ஆய்வுகூடம் நாட்டில் நிறுவப்பட்டுள்ள ஆய்வுகூடங்களில் மிக மிக முக்கியமான ஓர் ஆய்வுகூடமாகும். இலங்கையில் விஞ்ஞான ரீதியான வெளிப்பாடுகளையும்; சாட்சிகளையும் அடிப்படையாகக்கொண்ட உற்சாகமான போதையூட்டும் ஒளடத கட்டுப்பாட்டு/ தடுப்பு முறைமையொன்றை அமுல்படுத்துவதற்கு அவசியமான ஆய்வுகூட சேவைகளும் விஞ்ஞான ரீதியான உதவியும் இதன் மூலம் வழங்கப்படுகிறது.

தேசிய போதையூட்டும் ஒளடத தொல்லை பற்றிய சரியான அறிவையும் சரியான கண்காணிப்பு முறைமைகளையும் பின்பற்றுவதற்கும் அதனைப் பலப்படுத்துவதற்கும் விஞ்ஞான ரீதியான வேறுபாட்டெல்லைகளையும் இயலாற்றல்களையும் பயன்படுத்தி போதையிலிருந்து விடுதலையடைந்த‚ ஆரோக்கியமான‚ அமைதியான ஒரு மக்கட் சமூகத்தை உருவாக்குதல் ஆய்வுகூடத்தின் முக்கிய நோக்கமாகும்.

நாட்டிலுள்ள போதையூட்டும் ஒளடத பிரச்சினையை மிகச் சிறந்த முறையில் புரிந்துகொண்டு‚ அதனைக் கண்காணித்து‚ விஞ்ஞான ரீதியான இயலளவை முன்னேற்றி‚ போதையூட்டும் ஒளடத பாவனையற்ற‚ ஆரோக்கியமான வாழ்வையும் அமைதியான சமூகமொன்றையும் தோற்றுவித்தல் தேசிய போதையூட்டும் ஒளடதங்கள் ஆய்வுகூடத்தின் நோக்கமாகும்.




எமது அடிப்படை மதிப்பீடு

புதிய முன்வைப்புகளுக்கான நம்பகத்தன்மை‚ தொழில்வாண்மைத்துவம்‚ பரிபூரணத்தன்மை‚ பொறுப்புணர்வு/ வகைகூறும்பாங்கு என்பவற்றினூடாக வினைத்திறன் மிகு ஒரு சேவையை நாட்டுக்கு வழங்குதல்.

அதற்கான எமது சேவை?

போதையூட்டும் ஒளடதங்களுக்காக சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் புலனாய்வுகளுக்கும் உரிய விஞ்ஞான ரீதியான உதவியை வழங்குதல்.
விஞ்ஞான ரீதியான சான்றுகளை அடிப்படையாகக்கொண்ட உபாயமுறை இடையீடுகளில் உதவுதல்.
விஞ்ஞான ரீதியான பரிந்துரைகளுக்கும் நடவடிக்கைகளுக்குமான புலனாய்வுச் சேவைகளை வழங்குதல்.
விஞ்ஞான ரீதியான சான்றுகளை அடிப்படையாகக்கொண்ட கொள்கைகளும் முடிவுகளும் சார்பாக செயலாற்றுதல்.
விஞ்ஞான ரீதியான விடயங்களை அடிப்படையாகக்கொண்ட புதிய எண்ணக்கருக்கள்‚ பொது நியமங்கள் மற்றும் காலப்பொருத்தமுடைய பிரயோகங்களை ஊக்குவித்தல்.

எமது ஆய்வுகூட சேவையின் தரம்

தேசிய போதையூட்டும் ஒளடதங்கள் ஆய்வுகூடத்தின் தரக் கொள்கை

சேவைநாடுநர்களதும் உரிய நியதிச்சட்ட அல்லது சட்ட ஒழுங்குவிதிகளுடன் சம்பந்தப்பட்;ட அதிகாரபீடங்களதும் எதிர்பார்க்கைகளை விஞ்சிச்செல்லும் விதத்திலான உயர் தரம் வாய்ந்த ஆய்வுகூட மற்றும் விஞ்ஞான சேவைகளை பயனுறுதிவாய்ந்ததாகவும்; தரமானதாகவும் உற்சாகமான முகாமைத்துவ முறைமையொன்றின் ஊடாக வழங்குதல்.
சர்வதேச தர நியமங்கள்;

ஐக்கிய நாடுகள் போதையூட்டும் ஒளடதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் பற்றிய அலுவலகத்தினால் (UNODC) நடாத்தப்படும் சர்வதேச தர சான்றுப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தில் தேசிய போதையூட்டும் ஒளடதங்கள் ஆய்வுகூடம் பங்கேற்பதுடன்‚ எமது பரிசோதனை முடிவுகளின் துல்லியமும்; தரமும் அடிக்கடி சர்வதேச மட்டத்தில் கண்காணிக்கப்படுகிறது.

ஆய்வுகூட மற்றும் விஞ்ஞான சேவைகள்

போதையூட்டும் ஒளடத பாவனையைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய கொள்கையை செயற்படு ரீதியில் அமுல்படுத்துவதற்கு விஞ்ஞான ரீதியான சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு‚ உபாயமுறை ரீதியான பயன்பாடுகளுக்கு அவசியமான உதவியை வழங்கும் பொருட்டு மிகச் சீரானதும் இணைந்ததும் பல்லினமானதுமான ஒருங்;கிணைப்பூட்டல் சேவையொன்றை வழங்கும் பொருட்டு தேசிய போதையூட்டும் ஒளடதங்கள் ஆய்வுகூடத்தின் பணியாட்குழு அர்ப்பணிப்புடன் செயலாற்றும்.

போதையூட்டும் ஒளடத சட்டத்தை பயனுறுதிவாய்ந்த விதத்தில் அமுல்படுத்துவதற்கான விஞ்ஞான ரீதியான உதவி

- - விசாரணை, செயல்பாட்டு மற்றும் உளவுத்துறை நோக்கங்களுக்காக சந்தேகிக்கப்படும் மருந்து பகுப்பாய்வு
- புல அடையாளம் காண மருந்து கண்டறிதல் சோதனை கருவிகளை வழங்குதல் அறிவியல் ஆலோசனை சேவைகள்
- வளர்ந்து வரும் மருந்துகள் மற்றும் சட்டவிரோத மருந்து சந்தை போக்குகளை அடையாளம் காண்பதற்கான திறன் மேம்பாடு
- இணையம் மற்றும் சமூக ஊடக போதைப்பொருள் விற்பனை மற்றும் அஞ்சல் / கூரியர் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான எதிர் நடவடிக்கைகள்

மருந்துகள் / பொருட்கள் திசைதிருப்பப்படுவதைத் தடுக்க ஒழுங்குமுறை நோக்கங்களுக்கான அறிவியல் ஆதரவு

-புலனாய்வு, நடவடிக்கைகள் மற்றும் உளவுத்துறை நோக்கங்களுக்கான சந்தேகத்திற்கிடமான போதையூட்டும் ஒளடதங்களின் பகுப்பாய்வு.
- வெளிக்கள அடையாளம் காணலுக்காக போதையூட்டும் ஒளடதங்களை அடையாளம் காணும் பரிசோதனைக் கருவிகலத்தொகுதிகளை வழங்குதல்.
- விஞ்ஞான ரீதியான ஆலோசனை சேவைகள்.
-ஆதிக்கமுள்ள போதையூட்டும் ஒளடதங்களை அடையாளம் காணலும் சட்டவிரோதமான ஒளடத சந்தைப் போக்குகளின் அடிப்படையிலான இயல்திறன் விருத்தியும்.
-இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக போதையூட்டும் ஒளடதங்களின் சந்தைப்படுத்தலுக்கும் தபால்/ கூரியர் சேவை ஊடாக இடம்பெறும் போதையூட்டும் ஒளடத கடத்தலுக்கும் எதிராக மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் சம்பந்தமான விஞ்ஞான அறிவு.

ஒளடதங்கள்/ பதார்த்தங்கள் விரிவடைதலைத் தடுப்பதற்கான ஒழுங்குறுத்தல் நோக்கங்களுக்கான விஞ்ஞான ரீதியான உதவி

- உயர்மட்டத்தில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான மூலவாய்ப்பு வளமுள்ள சந்தேகத்திற்கிடமான ஒளடதங்களை அடையாளம் காணலும் அவற்றைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தலும்.
-உலக தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள் ஒழிப்பு முகவராண்மையினால் (World Anti Doping Agency) தடைசெய்யப்பட்டுள்ள‚ விளையாட்டுக்களின்போது வீரியத்தை அதிகரிக்கும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள் அடங்கிய நிரப்பியுணவுப் பொருட்களை பரிசோதித்தல்.
- மதுபானம் மற்றும் புகையிலை அடங்கிய உற்பத்திகளின்; பகுப்பாய்வும் முன்னோடி இரசாயனப் பதார்த்தங்களின் பகுப்பாய்வும்.

விஞ்ஞான ரீதியான சான்றுகளை அடிப்படையாகக்கொண்ட போதையூட்டும் ஒளடத பாவனையை தடுப்பதற்கான உபாயமுறைகள்

- பாடசாலைச் சிறார்கள் மத்தியில் போதையூட்டும் ஒளடத பாவனையைத் தடுப்பதற்கு போதையூட்டும் ஒளடங்கள் மற்றும் திறன் அபிவிருத்தி பற்றிய கட்டுக்கதைகளுக்கும் உண்மைகளுக்கும்; பின்னணியிலுள்ள விஞ்ஞானம் பற்றிய விஞ்ஞான ரீதியான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்.
- பாடசாலைகள்‚ பல்கலைக்கழகங்கள்‚ தொழில்புரியும் இடங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் போதையூட்டும் ஒளடத பாவனையைத் தடுப்பதற்கான‚ விஞ்ஞான ரீதியான சான்றுகளை அடிப்படையாகக்கொண்ட பொருத்தமான முறைமைகளை ஊக்குவித்தல்.
- பாடசாலைகள் மற்றும் தொழில்புரியும் இடங்களுக்கு போதையூட்டும் ஒளடத பாவனைத் தடுப்பதற்கான உபாயமுறைகளை விருத்திசெய்தல்‚ அமுல்படுத்தல்‚ கண்காணித்;தல்‚ மதிப்பீடு செய்தல் என்பவற்றுக்கான விஞ்ஞான ரீதியான ஆலோசனைகள்.
- சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்கள் மற்றும் சிறைகளில் கைதிகளின் போதைக்கான காரணத்தை அடையாளம் காணுதல் மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து அவர்கள் விலகியிருப்பதை அடையாளம் காணுதல்

விஞ்ஞான ரீதியான சான்றுகளை அடிப்படையாகக்கொண்ட சிகிச்சையளிப்பு‚ புனர்வாழ்வளிப்பு மற்றும் சமூகத்தோடு மீளிணைப்பதற்கான உபாயமுறைகள்

- போதையூட்டும் ஒளடதங்களில் தங்கியுள்ளவர்களுக்கான சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு சம்பந்தமான 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அவசியமான உயிரியல் (சிறுநீர்) மாதிரி பகுப்பாய்வு அறிக்கைகளை நீதவான் நீதிமன்றத்திற்கு வழங்குதல்.
- தனியார் மற்றும் அரச மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு நோய் நிர்ணயம் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை பரிந்துரைத்;தல்.
- தனிப்பட்ட மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையங்களிலும் சிறைச்சாலைகளிலும் தங்கியிருப்பவர்களின் போதையூட்டும் ஒளடதங்களைப் பாவிப்பதற்கான காரணத்தை அடையாளம் காணலும்‚ போதையூட்டும் ஒளடத பாவனையிலிருந்து அவர்களை விடுவித்துக்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்தலும்.
- முன் தொழில் மற்றும் வெளிநாட்டுக் கல்வி ‘பரீட்சிப்பு’ நோக்கங்களுக்காக ‘போதையற்ற’ என்பதற்கான சான்றிதழ்களை வழங்குதல்.
- தொழில்புரியும் இடங்களில் மேற்கொள்ளப்படும் போதையூட்டும் ஒளடத பரிசோதனைகளின் ஊடாக அவ்விடங்களின் வினைத்திறனையும் விளைதிறனையும் முன்னேற்றுதல்.
- போதையூட்டும் ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்களுக்கு சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்புத் துறையில் மருத்துவ மற்றும் உளவளத்துணை தொழில்வாண்மையினரின் இயல்திறனை விருத்தி செய்தல்.
- பகுப்பாய்வுக்காக உயிரியல் மாதிரி (சிறுநீர்) மாதிரிப்பொருள்களை முன்வைப்பதற்கான அறிவுரைகளை வழங்குதல்.

போதையூட்டும் ஒளடதங்கள் கட்டுப்பாட்டுத் துறையுடன் சம்பந்தப்பட்ட சட்டத்தை அமுல்படுத்தும் அதிகார பீடங்களுக்கும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுக்குமான அறிவுசார் இயல்திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்


போதையூட்டும் ஒளடதங்கள்‚ உளமருட்சியை உண்டுபண்ணும் வெறியப் பதார்த்தங்கள், கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட ஒளடதங்கள் மற்றும் முன்னோடி இரசாயனப் பதார்த்தங்களின் இறக்குமதி‚ ஏற்றுமதி‚ விநியோகம் ஆகிய விடயங்களில் இதனோடிணைந்து பணியாற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களின் சட்டம் பற்றிய அறிவையும் ஆராய்ச்சி இயலாற்றல்களையும் விஞ்ஞான ரீதியான தோற்றவடிவினூடாக அறிவூட்டுவதற்கான பயிற்சி அமர்வுகள் நடாத்தப்படுகின்றன.
முக்கியமாக துஷ்பிரயோகம் செய்யப்படும் ஒளடதங்களை அடையாளம் காணும்‚ சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களின் அலுவலர்கள் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுவதுடன்‚ போதையூட்டும் ஒளடதங்கள் சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் வளவாளர்களின் பங்களிப்புடன் போதையூட்டும் ஒளடதங்கள் பற்றிய சாட்சிகளைத் திரட்டுதல்‚ வழக்குத் தயார்படுத்தல்‚ சட்டமுறை நடவடிக்கைகளுக்கான ஆற்றுப்படுத்தல் பற்றிய அவர்களின் நிபுணத்துவ அறிவும் வழங்கப்படும்.

இப்பயிற்சிச் செயலமர்வுகளின் நோக்கங்கள்:

1. போதையூட்டும் ஒளடதங்களும் உளமருட்சியை உண்டுபண்ணும் வெறியப் பதார்த்தங்களும் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுதல் சம்பந்தமான அடிப்படை அறிவை வழங்குதல்.
2. போதையூட்டும் ஒளடதங்களையும் உளமருட்சியை உண்டுபண்ணும் வெறியப் பதார்த்தங்களையும் அடையாளம் காணல் சம்பந்தமாக வெளிக்கள பரிசோதனைக் கருவிகலத்தொகுதிகளை உபயோகித்து பிரயோக ரீதியான அறிவை வழங்குதல்.
3. போதையூட்டும் ஒளடதங்களின் நவீன வடிவங்கள் பற்றிய பங்குபற்றுவோரின் அறிவை இற்றைப்படுத்தல்.

இயல்திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்

போதையூட்டும் ஒளடத தடுப்பு‚ கட்டுப்படுத்தலுடன் சம்பந்தப்பட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஒளடத சட்டங்களை அமுல்படுத்தும் நிறுவனங்கள்‚ சுகாதார அதிகாரிகள்‚ சிறைச்சாலை அதிகாரிகள்‚ கல்விப் பிரிவு‚ தொழில்புரியும் இடங்கள்‚ ஆய்வுகூட ஊழியர்கள் முதலியன உள்ளிட்ட பின்வரும் விடயங்கள் தொடர்பில் அறிவை வழங்குவதற்கு NNL இனால் இயல்திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.

விஞ்ஞான ரீதியான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

போதையூட்டும் ஒளடதங்கள்‚ உளச் சிகிச்சைப் பொருள்கள்‚ முன்னோடி இரசாயனங்கள் உள்ளிட்ட போதையூட்டும் ஒளடத பாவனை பற்றிய விரிவுரைகளும் போதையூட்டும் ஒளடதங்கள் சம்பந்தமான தவறுகளில் சட்டப் பிரிவுகளின் கலந்துரையாடல்களும் அவற்றுக்குரிய உணர்த்துல்களும் விஞ்ஞான ரீதியான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில்; அடங்கும். அது மாத்திரமன்றி சட்டமா அதிபர் திணைக்களத்தின் வளவாளர்கள் போதையூட்டும் ஒளடதங்கள் பற்றிய சாட்சிகளைத் திரட்டுதல்‚ வழக்குத் தாக்கல்செய்தல்‚ நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்துதல் சம்பந்தமான சட்டங்கள் பற்றிய அவர்களின் நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

கணினிப் பயிற்சி (CBT) நிகழ்ச்சித்திட்டம்

ஐக்கிய நாடுகள் போதையூட்டும் ஒளடதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் பற்றிய அலுவலகத்தின் (UNODC) தொழில்நுட்ப உதவியுடன் போதையூட்டும் ஒளடதங்கள் சம்பந்தமான சட்டத்தை அமுல்படுத்தும் இயல்திறன்களைப் பலப்படுத்துவதற்காக‚ இந்த நியமப்படுத்தி இற்றைப்படுத்திய கணினிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் சிங்களம்‚ ஆங்கிலம் ஆகிய மொழிமூலங்களிலும் கவர்ச்சிகரமாக புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி நடாத்தப்படுகின்றன.

விஞ்ஞான ஆராய்ச்சிகள்

போதையூட்டும் ஒளடதங்கள் சார்ந்த பிரச்சினைகளையும் பல்வேறு தோற்றச்சாயல்களையும் உள்ளடக்குவதற்காக பயனுறுதிவாய்ந்த தீர்வுகளை வழங்கும் பொருட்டு போதையூட்டும் ஒளடதங்களுக்கான கேள்வியையும் வழங்கலையும் கட்டுப்படுத்துவதற்குரிய வெற்றிகரமான விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகளை நடாத்துதல் தேசிய போதையூட்டும் ஒளடதங்கள் ஆய்வுகூடத்தின் முக்கிய ஒரு பணியாகும்.

தேசிய போதையூட்டும் ஒளடதங்கள் ஆய்வுகூடத்தின் விஞ்ஞான அலுவலர்களினால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் உரிய விஞ்ஞான ரீதியான வெளியீடுகளும் புதிய கண்டுபிடிப்புக்களும் சம்பந்தமான ஏராளமான சமர்ப்பிப்புகள் உள்நாட்டு வெளிநாட்டுச் சஞ்சிகைகளில் முன்வைக்கப்பட்டுள்ளன.

தேசிய போதையூட்டும் ஒளடதங்கள் ஆய்வுகூடத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள்

  • • ஹெரொயின் போதையூட்டும் ஒளடதம்; சார்ந்த பயனர் சந்தை‚ சமூகத்தில் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான கிடைப்பனவுத்தன்மை‚ அதன் வழங்கல் வலையமைப்பின் விநியோகக் கோலங்களை அடையாளம் காணல்.
  • • போதையூட்டும் ஒளடதங்களின் இயல்பை அடையாளம் காணலும் அதில் அடங்கும் எச்ச மூலப்பொருள்கள் பற்றி ஆராய்தலும். அதன்படி பல்வேறு போதையூட்டும் ஒளடத வகைகளின் புவியியல் தோற்றுவாய்‚ போதையூட்டும் ஒளடத வழங்கலின் பல்வேறு கட்டங்களும் விநியோக வலையமைப்புகளும் பற்றிய ஆய்வு.
  • • போதையூட்டும் ஒளடதங்களுடன் சம்பந்தப்பட்ட முன்னோடி இரசாயனப் பதார்த்தங்களை அடையாளம் காணலும் அவை சார்ந்த உற்பத்தி முறைமைகளை கண்காணித்தலும்.
  • • பயனுறுதிவாய்ந்த கொள்கைசார்‚ சட்டம்சார் தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்‚ சுகாதாரப் பிரிவுகளின் பயனுறுதிவாய்ந்த தலையீடு சார்பாக‚ விஞ்ஞான ரீதியான சான்றுகளை அடிப்படையாகக்கொண்ட போதையூட்டும் ஒளடத பிரச்சினையின் இயல்பு, புதிய போக்குகளை பகுப்பாய்வுசெய்து அவற்றின் அடிப்படையில் மதிப்பீடுகளையும் விதப்புரைகளையும் முன்வைத்தல்.
  • • சிகிச்சை முறைகளின் நம்பகத்தன்மையையும் விளைதிறனையும் மதிப்பீட்டுக்கு உட்படுத்தல்.
  • • சிகிச்சையளிப்புச் செயன்முறையில் நீண்டகால பெறுபேறுகளுக்கான நினைவிற்கொண்டு செயற்படுத்துவதற்கான (Mindfulness) பயிற்சியளிப்பு பற்றிய விஞ்ஞான ரீதியான மதிப்பீடு.
  • • ‘புளொடர் கடதாசி மீதுள்ள புதிய உளமருட்சியை உண்டுபண்ணும் வெறியப் பதார்த்தங்களை அடையாளம் காணல்’ ஆராய்ச்சிகளின் அடிப்படையிலான கருத்துநிலை – முத்துமாலா கே.எம்‚ வீரசிங்க டிபீபீ‚ ஆலோக்க பண்டார எஸ்‚ அபேசிங்க எஸ்.
  • • “சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் போதையூட்டும் ஒளடத கடத்தலையும் போதையூட்டும் ஒளடத சட்ட இயலளவையும் பலப்படுத்துவதற்கான விஞ்ஞான ரீதியான புலனாய்வுத் தகவல்களைத் திரட்டும் தேவை” என்ற கருத்துரு அடிப்படையிலான கருத்துநிலை – அபேநாயக்க எம்.டப்.என்.எம்.‚ வீரசிங்க டீபீபீ‚ ஆலோக்க பண்டார எஸ்‚ அபேசிங்க எஸ்.
  • • மருத்துவ சட்ட விடயங்கள் சம்பந்தமான விஞ்ஞான ரீதியான புலனாய்வுத் தகவல்களும் டிஜிட்டல் சாட்சிகளும்: இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக இடம்பெறும் போதையூட்டும் ஒளடதங்களுடன் சம்பந்தப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத போதையூட்டும் ஒளடத கடத்தலை முறியடித்தல்’ என்ற கருத்துரு அடிப்படையிலான கருத்துநிலை (மருத்துவ சட்ட சங்கம்‚ வருடாந்த விஞ்ஞான அமர்வுகள்‚ 2018) அனூசன் கே‚ வீரசிங்க டீபீபீ‚ ஆலோக்க பண்டார எஸ்‚ அபேசிங்க எஸ்.
  • • போதையூட்டும் ஒளடதங்கள் சம்பந்தமான குற்றவியல் விடயங்களுக்கான பிரபல விஞ்ஞான ரீதியான சாட்சிகள் சட்டம்: சமாதானத்தையும் பலமான நிறுவனங்களையும் வலுவூட்டுவதற்கான பயன்கூர் முறைமை” என்ற கருத்து அடிப்படையிலான கருத்துநிலை – அனூசன் கே‚ வீரசிங்க டீபீபீ‚ ஆலோக்க பண்டார எஸ்‚ அபேசிங்க எஸ்.
  • • இறக்குமதிசெய்யப்பட்ட சாக்லட்களில் Psilocin என்ற போதையூட்டும் ஒளடதம் அடங்கியிருப்பதாக இலங்கையில் முதன்முதலாக அடையாளம் காணப்படல் (மருத்துவ சட்ட சங்கம்‚ வருடாந்த அமர்வுகள்‚ 2017) பர்னாந்து ஆர்‚ வீரசிங்க டீ.பீ.பீ‚ கொடகும்புற கே.கே.டீ.ரி.டீ.
  • • இலங்கை அஞ்சல் சேவை ஊடாக இடம்பெறும் கடத்தல் முயற்சியின்போது டயசஃபேம் போதையூட்டும் ஒளடதம் அடையாளம் காணப்படல். (மருத்துவ சட்ட சங்கம்‚ வருடாந்த விஞ்ஞான அமர்வுகள்‚ 2016) அத்தாவுத ஏ.டீ.வை.கே.‚ வீரசிங்க டீ.பீ.பீ.‚ பர்னாந்து ஆர்.
  • • பெருவாரியாக பயன்படுத்தப்படும் ஆயுர்வேத அரிஷ்ட உற்பத்திகளில் அனபொலிக் ஸ்டெரொயிட் ஊக்கியும் எத்தனோலும் அடங்கியுள்ளதா? (இலங்கை மருத்துவ சங்கத்தின் 131 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சர்வதேச மருத்துவ சம்மேளனத்தின் பொழிப்புரை) பர்னாந்து பீ.என்.ஜே.‚ பிகேரால எஸ்‚ ரொசானி எஸ்.ஏ.என்.‚ பர்னாந்து ஆர்‚ வீரசிங்க டீ.பீ.பீ.‚ கொடகும்புற கே.கே.டீ.ரி.டீ.‚ நிரிஎல்ல எம்.ஏ.‚ ஜயவிக்ரம எஸ்‚ சில்வா ஏ.பீ.த.
  • • வாழ்க்கைப் பாணியில் பலவின போதையூட்டும் ஒளடத பாவனை சம்பந்தமான சிக்கலான உயிரியல் பாய்மங்களின்; பகுப்பாய்வுகள் - அத்தாவுத ஏ.டீ.வை.கெ‚ வீரசிங்க டீ.பீ.பீ‚ பர்னாந்து ஆர்.
  • • ஹெரொயினின் படியிறக்கமும் மாதிரிப்பொருள்களில் மொனோ அசிட்டைல் மோர்ஃபீன் உள்ளடக்கத்திற்கு அதிலுள்ள தொடர்பு. (தாய்லாந்தின் பாங்கொக் நகரில் சட்ட மருத்துவம் மற்றும் சட்ட மருத்துவம் பற்றிய இந்து பசுபிக் சம்மேளனத்தில் முன்வைக்கப்பட்ட இலங்கையின் மருத்துவ – சட்ட சமூகவியலும் 1994 ஆம் ஆண்டின் 67 ஆம் இலக்க சட்ட மருத்துவ சர்வதேச சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.)
  • • Cannabis sativa L. இன் THC உள்ளடக்கத்தின் மாறி.
  • • சூழல் வெப்பநிலையிலும் சீதநிலையிலும் ஹெரொயின் மொனொ அசிட்டைல் மோர்ஃபீன் மற்றும் மோர்ஃபீனாக வீழ்ச்சியடைதலும் தெய்வடைதலும்
  • • இலங்கையின் பலவேறு பாகங்களில் கஞ்சாவிலுள்ள THC உள்ளடக்கத்தை மதிப்பீடுசெய்தலும் THC உள்ளடக்கத்திற்கு களஞ்சியப்படுத்தும் பாதிப்பும்.
  • • களஞ்சியப்படுத்தும் போது ஹெரொயினின் தேய்மானமும் இலங்கையின் சட்டரீதியான சட்டகத்தில் அதன் தாக்கமும்.
  • • ஹெரொயின் தரமிறக்கம் சம்பந்தமான வேறொரு பிரிவு பற்றிய மேலதிக ஆய்வு.
  • • பல்வேறு ஹெரொயின் மாதிரிகளின் தோற்ற இடங்களை அடையாளம் காண்பதற்கான புதிய முறைமைகள்.
  • • ஹெரொயின் பகுதி II சீர்கெடுதல் பற்றிய ஆய்வுகள்.
  • • எசிட்டில் கோடீன்/ மொர்ஃபீன் விகிதத்தை மதிப்பீடு செய்வதன் மூலம் ஹெரொயின் தெரு மட்ட மாதிரிகளின் தோற்ற இடத்தைத் தீர்மானித்தல் (இலங்கை மருத்துவ சட்ட சங்கத்தின் விஞ்ஞான அமர்வின்போது சமர்ப்பிக்கப்பட்டது.)
  • • கஞ்சா அடங்கியிருக்கும் ஓர் உள்ளுர் மருந்தான ‘மதன மோதகத்தின்’ சந்தை மாதிரிகளின் ஒப்பீட்டு ரீதியான பகுப்பாய்வு ஜப்பான் றோக்கியோ நகரில் சுகாதார‚ சுற்றாடல்‚ கலாசாரம் பற்றிய இரண்டாவது உலக மாநாட்டில் சமர்க்கப்பட்டதுடன்‚ விஞ்ஞான வருடாந்த அமர்வின் முன்னேற்றத்துக்கான சங்கத்தின் சர்வதேச மருத்துவ சஞ்சிகையில் பிரசுரித்துள்ளது.
  • • இலங்கையின் தெரு மட்ட மாதிரிப்பொருள் ஹெரொயினில் அடங்கியிருக்கும் ஐதாக்கல் மற்றும் மூலங்களை அடையாளம் காணும்போது அவற்றின் நீதிமன்றப் பயன்பாடு (மருத்துவ சட்ட சங்கத்தின் விஞ்ஞான அமர்வின்போது சமர்ப்பிக்கப்பட்டது.)
  • • தலங்கம புனர்வாழ்வளிப்பு நிலையத்தில் சிகிச்சைபெறுபவர்களின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கான சிறுநீர்ப் பகுப்பாய்வு.
  • • ஆயுர்வேத ஒளடதங்களுக்கு நெய்யைக் கொண்டு கஞ்சா நச்சு நீக்கத்தின் தாக்கம் - ஜப்பான் IAFS -டோக்கியோ.
  • • விளையாட்டில் மருந்துகள் - சட்ட மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றிய சில அம்சங்கள் - மெடிக்கோ சட்ட சங்கம்‚ இலங்கை.
  • • கஞ்சா அடங்கியிருக்கும் உள்ளுர் தயார்படுத்தல் - இலங்கை சூழமைவில் அவற்றின் சட்டமுறை முக்கியத்துவம்.
  • • சிக்கலான – கஞ்சாவை அடிப்படையாகக்கொண்ட ஒளடதங்கள் அதன் THC உள்ளடக்கங்களை அளவிடுவதற்கான நம்பகமான ஒரு பகுப்பாய்வுத் தொழில்நுட்பம்.
  • • BMARI இன் ஹெரொயினில் தங்கியுள்ளவர்களுக்கான ஒரு சிகிச்சையாக ஆயுர்வேத சிகிச்சையின் நம்பகத்தன்மை பற்றிய சிறுநீர்ப் பகுப்பாய்வுக் கருத்திட்டம்.
  • • இலங்கையின் பல்வேறு பாகங்களின் எரித்ரொக்சிலம் நவோகிரெடென்டென்ஸ் தொழிற்சாலையில் கொக்கைன் உள்ளடக்கத்தை பகுப்பாய்வுசெய்யும் அறிக்கை - இலங்கை மெடிக்கோ சட்ட சங்கத்தின் விஞ்ஞான அமர்வுகளின்போது சமர்ப்பிக்கப்பட்டது.
  • • இலங்கையின் பல்லின போதையூட்டும் ஒளடத பாவனைக்குள்ள வாய்ப்பை பரிசோதிக்கும் ஆராய்ச்சிக் கருத்திட்டம்.
  • • இலங்கையின் கஞ்சா வகைகளை அடையாளம் காண்பதற்கான ஆராய்ச்சிக் கற்கை.
  • அண்மைக்கால வளர்ச்சிகளும் தற்போது அமுல்படுத்தப்படும் கருத்திட்டங்களும்

  • • ஒளடத சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகளுக்கான இ-விஞ்ஞான ஆலோசனை.
  • • நடமாடும் போதையூட்டும் ஒளடத பரிசோதனைகளையும் நடமாடும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் அமுல்படுத்தல்.
  • • மருத்துவமனைகளில் போதையூட்டும் ஒளடத பரிசோதனைகளுக்கு சிறிய ஆய்வுகூட வசதிகளை வழங்குதல்.
  • • கூட்டு விஞ்ஞான ஆராய்ச்சிச் செயற்பாடுகள் பற்றிய ஆய்வுகூட வலையமைப்பு.
  • • போதையூட்டும் ஒளடதங்களைத் தடுப்பதற்கும்; கட்டுப்படுத்துவதற்குமான விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க என்ற துறைகளுக்கான ஓர் அரங்கைக் கட்டியெழுப்புவதற்குரிய வசதிகளை