image

முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபை

போதையூட்டும் ஒளடதங்களையும் உளமருட்சியை உண்டுபண்ணும் வெறியப் பதார்த்தங்களையும் சட்டவிரோதமான முறையில் கடத்துவதைத் தடுப்பதற்கான சமவாயத்தில் 2008 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சட்டத்தை வலுப்படுத்துவதை நோக்காகக்கொள்வதன் மூலம் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையோடு இணைக்கப்பட்ட முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபை (PCA) இலங்கையில் முன்னோடி இரசாயனப் பதார்த்தங்களை ஒழுங்குபடுத்தும் தேசிய அதிகாரசபையாக தொழிற்படுகிறது.
இலங்கையில் முக்கியமாக நறுமணப் பொருட்கள்‚ களிம்புகள்‚ சாயங்கள்‚ மருந்துகள்‚ பிளாஸ்ரிக் உள்ளிட்ட நாளாந்த தேவைப்பொருட்களை பரந்தளவில் சட்டரீதியாக உற்பத்திசெய்வதற்கு முக்கியமாக இந்த முன்னோடி இரசாயனப் பதார்த்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் மெத்தம்பிட்டமின், ஹெரொயின்‚ கொக்கைன் போன்ற சட்டவிரோதமான ஒளடதங்களை உற்பத்தி செய்வதற்கும் அவை துஷ்பிரயோகம் செய்யப்படலாம். முன்னோடி இரசாயனப் பதார்த்தங்கள் சட்டவிரோதமான வழிகளில் பரிமாறப்படுவதை தடுப்பது முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் முக்கிய கடமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.




முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பணிகள்

இலங்கையிலிருந்து போதையூட்டும் ஒளடத தொல்லையை ஒழித்துக்கட்டுவதற்காக செயல்படும் அதிகாரசபை என்ற வகையில் முன்னோடி இரசாயனப் பதார்த்தங்களின் இறக்குமதி‚ ஏற்றுமதி‚ விநியோகம் என்பவற்றை பயன்கூர் விதத்தில் கண்காணிக்கும் நோக்குடன் முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபை இப்பணிகளை ஆற்றுகின்றது.

I. அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்

2008 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கச் சட்டத்தின் முதலாம் அட்டவணையின் I, II ஆம் அட்டவணைகளில் காட்டப்பட்டுள்ள எந்தவொரு பதார்த்தத்தையும் இறக்குமதிசெய்ய அல்லது ஏற்றுமதி செய்யக் கருதும் ஆளெவரும் முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபையிடமிருந்து அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

II. வளவுகளைப் பதிவுசெய்தல்

சட்டத்தின் முதலாம் அட்டவணையின் I, II ஆம் அட்டவணைகளில் காட்டப்பட்டுள்ள பதார்த்தங்களை இறக்குமதிசெய்தல் அல்லது ஏற்றுமதிசெய்தல் சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபடும் ஒவ்வொரு அனுமதிப்பத்திரதாரரும் தமது வளவுகளைப் பதிவுசெய்ய வேண்டும்.

III. கண்காணிப்பும் பரீட்சையும்

அனுமதிப்பத்திரதாரர்களின் பதிவுசெய்யப்பட்ட வளவுகளை அடிக்கடி பரிசோதிக்க வேண்டுமென்பதுடன் சட்டத்தின் முதலாம் அட்டவணையின் I, II ஆம் அட்டவணைகளில் காட்டப்பட்டுள்ள பதார்த்தங்களை உபயோகித்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் PCA இனால் கண்காணிக்கப்பட வேண்டும்.

பதிவை/அனுமதிப்பத்திரத்தை வழங்க முன்னர் பரிசோதனைகள் நடாத்தப்படுகின்றன. பதிவுசெய்துகொள்வதற்கு முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் விண்ணப்பப் டிவமொன்றை பட்டியலிடப்பட்டுள்ள கம்பனி/ கம்பனிகளின் அறிக்கைகளையும் பதார்த்தங்களையும்; பரிசோதிப்பதற்காக இப்பரிசோதனை நடாத்தப்படுகிறது.

பரிசோதனையை மேற்கொள்ள முன்னர் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சரிபார்க்கப்படும். தொழில்முயற்சியின் பின்புலத் தகவல்களும் நிரந்தர அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற விடயமும் பரிசோதனைக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ள செயற்பாடுகளும் (இரசாயனப் பதார்த்தங்களைக் கையாளல் முதலிய) பற்றிய தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

சர்வதேச செயற்பாடுகள்

இது தவிர, பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பைப் பேணுவதற்காக முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் சர்வதேச மட்டத்தில் பின்வரும் கருமங்கள் மேற்கொள்ளப்படுகின்றன:-
இறக்குமதி நாடுகளுக்கு முன் ஏற்றுமதி அறிவிப்பை (PEN) வழங்குதல்.
முன் ஏற்றுமதி அறிவிப்பு சம்பந்தமான பரீட்சிப்புகளை நடாத்துதல்.
சர்வதேச போதையூட்டும் ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையுடனும் (INCB) வேறு நாடுகளில் செயல்படும் அதிகாரசபைகளுடனுமான உயிர்ப்பான உரையாடல்களின் ஊடாக பரிசோதனைகளுக்கு உதவுதல்.
சர்வதேச போதையூட்டும் ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கு அறிக்கைகளை வழங்குதல் (D படிவம்)

சர்வதேச வர்த்தகத்தி;ல் முன்னோடி இரசாயனங்கள் கட்டுப்பாட்டுடன் இணைதல்

சர்வதேச கட்டுப்பாட்டின் கீழுள்ள முன்னோடி இரசாயனப் பதார்த்தங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு‚ கப்பலேற்றுகைக்கு முன்னர் பட்டியலிடப்பட்ட இரசாயனப் பதார்த்தங்களை ஏற்றுமதிசெய்யும் அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் ஏற்றுமதிகளை கப்பலேற்றல் பற்றி இறக்குமதி நாடுகளின் அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டுமென சர்வதேச போதையூட்டும் ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை சிபார்சு செய்துள்ளது.
இக்காலப்பகுதியில் முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு முன் ஏற்றுமதி அறிவிப்புகள் (PநுN) கிடைத்துள்ளதுடன் முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபை செயற்படு ரீதியில் முன் ஏற்றுமதி அறிவிப்புகளை மீளாய்வு செய்துள்ளதுடன்‚ ஏற்றுமதி நாடுகளின் அமுலாக்கல் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இரசாயனப் பதார்த்தங்களின் சட்டபூர்வ வர்த்தக நீரோட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும் இத்தகவல்கள் முன்னோடி இரசாயனங்களை தனி கப்பலேற்றல்களின் சட்டபூர்வதன்மையை அடையாளம் காண்பதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு உதவுவதுடன்‚ சந்தேகத்திற்குரிய கப்பலேற்றலை வினைத்திறனாக‚ காலப்பொருத்தமுடைய விதத்தில் இடைநிறுத்துவதற்கு அல்லது நிறுத்துவதற்கு வாய்ப்பளிக்கின்றது.

முன்னோடி இரசாயனப் பதார்த்தங்களின் பட்டியல்

Table ITable II
1- Acetic Anhydride
2- N-Acetylanthranilic  acid
3- Ephedrine
4- Ergometrine
5- Ergotamine
6- Isosafrole
7- Lysergic acid
8- 3,4-Methylenedioxyphenyl-2 propanone
9- Norephedrine
10- 1-Phenyl-2-propanone
11- Piperonal
12- Potassium permanganate
13- Pseudoephedrine
14- Safrole
1- Acetone
2-Anthranilic acid
3- Ethyl ether
4- Hydrochloric acid
5- Methyl ethyl ketone
6- Phenylacetic acid
7- Piperidine
8- Sulphuric acid
9- Toluene


முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்கு/ அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு தொடரறா/இணையவழியில் (online) நேரமொன்றை ஒதுக்கிக்கொள்வதற்கான படிவம் Click Here


அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு/ பதிவுசெய்வதற்கு விண்ணப்பப்படிவங்களைச் சமர்ப்பித்தல் - இங்கே சொடுக்கவும்.
Click Here பொதுமக்களுக்கான அறிவித்தல் - அனுமதிப்பத்திரங்களை/ பதிவுச் சான்றிதழ்களை விநியோகித்தல் - இங்கே சொடுக்கவும்.


படிவம்
படிவம் 1 - அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் - English | Sinhala | Tamil
படிவம் 2 - அனுமதிப்பத்திரத்தைத் திருத்துவதற்கான விண்ணப்பப்படிவம் - English | Sinhala | Tamil
படிவம் 3 - அனுமதிப்பத்திரமொன்றைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவம் - English | Sinhala | Tamil
படிவம் 4 - வளவுகளைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பப்படிவம் - English | Sinhala | Tamil
படிவம் 5 - காலாண்டு அறிக்கைகள் - English | Sinhala | Tamil
படிவம் 6 - விநியோகத்தர்களைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பப்படிவம் - English | Sinhala | Tamil
படிவம் 7 - விநியோகத்தர்களாக பதிவைத் திருத்துவதற்கான விண்ணப்பப்படிவம் - English | Sinhala | Tamil
படிவம் 8 - விநியோகத்தர் ஒருவராக பதிவைப் புதுப்பித்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் - English | Sinhala | Tamil
படிவம் 9 - இறுதிப் பயனர் ஒருவராக பதிவுசெய்துகொள்வதற்கான விண்ணப்பப்படிவம் - English | Sinhala | Tamil
படிவம் 10 - இறுதிப் பயனர் ஒருவராக பதிவைத் திருத்துவதற்கான விண்ணப்பப்படிவம் - English | Sinhala | Tamil
படிவம் 11 - இறுதிப் பயனர் ஒருவராக பதிவைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவம் - English | Sinhala | Tamil


முன்னோடி இரசாயனப் பதார்த்தங்களின் பட்டியல்
2008 ஆம் ஆண்டின் I ஆம் இலக்க போதையூட்டும் ஒளடதங்களதும் நிறமூட்டிப் பதார்த்தங்களதும் சட்டவிரோதமான கடத்தலுக்கெதிரான சமவாயங்களுக்கான முதலாம் அட்டவணையின் I II நிரல்களில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளன.

PDF கோப்புகளை பதிவிறக்கம் செய்தல் English Sinhala Tamil

Ser தொடர் இல. இரசாயனப் பெயர் HS இல. CAS இல.
01 Acetic Anhydride 2915.24 108-24-7
02 N-Acetylanthranillic acid 292423 89-52-1
03 Ephedrine 2939.41 299-42-3
04 Ergometrine 2939.61 60-79-7
05 Ergotamine 2939.62 113-15-5
06 Isosafrole 2932.91 120-58-1
07 Lysergic acid 2939.63 82-58-6
08 3,4-Methylenediosyphenyl 2932.92 4676-39-5
09 Norephedrine 2939.49 154-41-6
10 1-Pheny1-2-propanone 2914.31 103-79-7
11 Piperonal 2932.93 120-57-0
12 Potassium permanganate 2941.61 7722-64-7
13 Pseudoephedrine 2939.42 90-82-4
14 Safrole 2932.94 94-59-7


PDF கோப்புகளை பதிவிறக்கம் செய்தல் English Sinhala Tamil
தொடர் இல. இரசாயனப் பெயர் HS இல. CAS இல.
01 Acetone 2914.11 67-64-1
02 Anthranillic acid 2922.43 118-92-3
03 Ethyl ether 2909.11 60-29-7
04 Hydrochloric acid 2806.10 7647-01-0
05 Methyl ethyl ketone 2914.12 78-93.3
06 Phenylacetic acid 2916.34 103-82-2
07 Piperidine 2933.32 110-89.4
08 Sulphuric acid 2807.00 7664-93-9
09 Toluene 2902.30 108-88-3


பிரமாணங்கள்

PDF கோப்புகளை பதிவிறக்கம் செய்தல் English Sinhala Tamil
2008 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கச் சட்டத்தின் விரிவாக்கம்

சட்டவிரோதமான கடத்தல்களையும் போதையூட்டும் ஒளடதங்களையும் உளமருட்சியை உண்டுபண்ணும் வெறியப் பதார்த்தங்களையும் உபயோகிப்பதைத் தடுப்பதற்கு சர்வதேச மட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியின் முக்கிய விளைவாக 1961 போதையூட்டும் ஒளடதங்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் தனி சமவாயத்தையும் 1971 உளமருட்சியை உண்டுபண்ணும் வெறியப் பதார்த்தங்கள் பற்றிய சமவாயத்தையும் அறிமுகப்படுத்தலாம்.

1988 டிசம்பர் மாதம் 10 ஆந் திகதி வியன்னா நகரில் கைச்சாத்திடப்பட்ட 1988 போதையூட்டும் ஒளடதங்களையும் உளமருட்சியை உண்டுபண்ணும் வெறியப் பதார்த்தங்களையும் சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சமவாயத்தை மேற்குறிப்பிட்ட சமவாயங்களின் ஒரு நீட்சியாக அறிமுகப்படுத்தலாம்.

மேலும் இலங்கை மேற்குறிப்பிட்ட 1988 ஐக்கிய நாடுகள் சமவாயத்திற்கும் போதையூட்டும் ஒளடதங்ககள் மற்றும் உளமருட்சியை உண்டுபண்ணும் வெறியப் பதார்த்தங்களை சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்கு எதிரான 1990 பிராந்திய ஒத்துழைப்பு பற்றிய தெற்காசிய சங்கத்திற்கும் பங்கீடுபாட்டாளரொருவராக இருப்பதன் மூலம் மேற்குறிப்பிட்ட சர்வதேச சட்டத்தை உள்நாட்டுச் சட்டமாக அமுல்படுத்துவதற்காக 2008 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கச் சட்டம் நிலைநாட்டப்பட்டது.

இது தவிர அதிகாரசபையினால் வெளியிடப்பட வேண்டிய அனுமதிப்பத்திரங்களும் பதிவுச் சான்றிதழ் வகைகளும் அவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைமுறைகளும் 2010 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபையை நிறுவுவதற்கான பிரமாணங்களின் கீழ் மிகத் திருத்தமாக வெளியிடப்பட்டுள்ளன.

2008 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கச் சட்டத்தின் 18 ஆம் பிரிவு

அமைச்சரினால் இச்சட்டத்தின் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை நிருவகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் தனிநபரொருவரை அல்லது தனிநபர்கள்; குழுவொன்றை முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபை (இதனகத்துப் பின்னர் அதிகாரசபை என்றழைக்கப்படும்) நியமிக்க வேண்டும். அதிகாரசபை இலங்கையில் தொழிற்பட வேண்டுமென்பதுடன் 1988 ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் ஏற்பாடுகளைப் பின்பற்றியும் சட்டத்தின் கீழ் விதித்துரைக்கப்பட்டுள்ள பணிப்புகளுக்கு அமையவும்; சட்டத்தின் முதலாம் அட்டவணையின் I‚ II ஆகிய அட்டவணைகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள பதார்த்தங்களின் உற்பத்தி, விநியோகம் என்பவற்றைக் கண்காணிக்க வேண்டும்.

* முன்னோடி கட்டுப்பாட்டு ஆணைய விதிமுறைகள், 2010 ஆம் ஆண்டின் எண் 1

போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருள்களில் சட்டவிரோத போக்குவரத்துக்கு எதிரான மாநாடுகளின் 18 மற்றும் 19 பிரிவுகளுடன் படித்த பிரிவு 31 இன் கீழ் ஜனாதிபதி விடுத்துள்ள விதிமுறைகள், 2008 ஆம் ஆண்டின் எண் 1, அரசியலமைப்பின் 44 வது பிரிவின் பத்தி (2) உடன் படித்தது , இது 04 மே 2010 தேதியிட்ட ஒரு அசாதாரண வர்த்தமானியால் வெளியிடப்பட்டது.

2010 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் ஒழுங்குவிதிகள்
2010 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியின் மூலம் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் 2 ஆம் பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, போதையூட்டும் ஒளடதங்களையும் உளமருட்சியை உண்டுபண்ணும் வெறியப் பதார்த்தங்களையும் சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்கு எதிரான 2008 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கச் சட்டத்தின் 18, 19 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, அச்சட்டத்தின் 31 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

முன்னோடிக் கட்டுப்பாட்டு அதிகாரசபை உறுப்பினர்களின் கட்டமைப்பு -

(i)   தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தவிசாளர்;

(ii)   சட்டமா அதிபர் அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர் ;

(iii)   பொலிஸ்மா அதிபர் அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர்;

(iv)   பொலிஸ் போதையூட்டும் ஒளடதங்கள் பணியகத்தின் பணிப்பாளர் அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர்;

(v)   இயக்குநர் - ஜெனரல், இலங்கை சுங்க அல்லது அவரது வேட்பாளர் ;

(vi)   பணிப்பாளர் நாயகம்‚ இலங்கை சுங்கம் அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர்;

(vii)   மதுவரி ஆணையாளர் நாயகம் அல்லது அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர்;

(viii)   சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல்கள் பிரிவின் பணிப்பாளர் அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர் ;

(ix)   மருத்துவ தொழில்நுட்ப மற்றும் வழங்கல்கள் பணிப்பாளர் அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர் ;

(x)   பணிப்பாளர் நாயகம் - இலங்கை முதலீட்டுச் சபை அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர் ;

(xi)   பணிப்பாளர் நாயகம் - மத்திய சுற்றாடல் அதிகாரசபை அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர் ;

(xii)   கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் (தற்போது கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு) அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர் ;

(xiii)   இறக்குமதி‚ ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் அல்லது அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர்;

(xiv)   ஆயுர்வேத ஆணையாளர் அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர்;

(xv)   இலங்கை வணிக மற்றும் கைத்தொழில் சபை சம்மேளனத்தின் தவிசாளர் அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர்;

(xvi)   இலங்கை மருந்துக் கைத்தொழில் வணிக சபையின் தவிசாளர் அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர்;

(xvii)   இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் அல்லது அவரது பெயர்குறித்த நியமத்தர்;


கட்டணங்கள்

இறக்குமதி / ஏற்றுமதி
படிவம் 1 அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் Rs. 5,000.00
படிவம் 2 அனுமதிப்பத்திரமொன்றை திருத்துவதற்கான விண்ணப்பப்படிவம் Rs. 2,000.00
படிவம் 3 அனுமதிப்பத்திரமொன்றை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவம் Rs. 4,500.00

வளவுகள்
படிவம் 4 வளவுகளைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பப்படிவம் Rs. 5,000.00

விநியோகத்தர்கள்
படிவம் 6 விநியோகத்தர்களாக பதிவுசெய்வதற்கான விண்ணப்பப்படிவம் Rs. 4,000.00
படிவம் 7 விநியோகத்தர்களாக பதிவுசெய்யப்படுவதை திருத்துவதற்கான விண்ணப்பப்படிவம் Rs. 1,500.00
படிவம் 8 விநியோகத்தர்களாக பதிவைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவம் Rs. 3,500.00

இறுதிப் பயனர்கள்
படிவம் 09 இறுதிப் பயனர் ஒருவராக பதிவுசெய்வதற்கான விண்ணப்பப்படிவம் Rs. 1,500.00
படிவம் 10 இறுதிப் பயனர் ஒருவராக பதிவுசெய்யப்படுவதை திருத்துவதற்கான விண்ணப்பப்படிவம் Rs. 500.00
படிவம் 11 இறுதிப் பயனர் ஒருவராக பதிவை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவம் Rs. 1,000.00

ஒவ்வொரு விண்ணப்பப்படிவத்திற்கும்; 10% முத்திரைக் கட்டணம் சேர்க்கப்படும்.


சரிபார்ப்புப் பட்டியல்

விநியோகத்தர்கள் English Sinhala Tamil
இறுதிப் பயனர்கள் English Sinhala Tamil
ஏற்றுமதியாளர்கள் English Sinhala Tamil
இறக்குமதியாளர்கள் English Sinhala Tamil
வளவுகள் English Sinhala Tamil
வாடிக்கையாளரை அறிவுறுத்துவதற்கான அறிக்கை
PDF கோப்புகளை பதிவிறக்கம் செய்தல் English Sinhala Tamil
இரசாயனத் தேவைப்பாட்டு சரிபார்ப்புப் படிவம்
PDF கோப்புகளை பதிவிறக்கம் செய்தல் English Sinhala Tamil

என்.டி.டி.சி.பி என்பது முன்னோடி அரசு நிறுவனம் ஆகும், இது இலங்கையிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் அதன் செயல்பாடுகளை நிறைவேற்றுகிறது. மற்ற செயல்பாடுகளில், போதைப்பொருள் சார்ந்தவர்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் போதைப்பொருள் சார்ந்தவர்களை மறுவாழ்வு செய்வது என்டிடிசிபியின் முக்கிய பாத்திரங்கள்.

தொடர்பு விபரங்கள்

சமூக ஊடகம்