ஆராய்ச்சிப் பிரிவு‚ நாட்டின் போதையூட்டும் ஒளடத பிரச்சினையை மதிப்பீடு செய்வதற்கும் மேற்பார்வைசெய்வதற்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள்‚ சிவில் சமூகம் மற்றும் பொதுமக்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி கொள்;கைகளைத்; திருத்தல்‚ புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் தீர்மானங்களை மேற்கொள்ளல் என்பவற்றுக்கான தகவல்களை வழங்குகிறது.
(அ) உப பிரிவு – அபாயகர ஒளடத துஷ்பிரயோகத்தைத் தடுத்தலும் கட்டுப்படுத்தலும் சம்பந்தமான ஒரு தேசிய கொள்கையை வகுத்தமைத்தலும் மீளாய்வுசெய்தலும் அவ்வாறான ஒரு கொள்கை பற்றி அமைச்சருக்கு மதியுரைகளையும் விதப்புரைகளையும் முன்வைத்தலும்.
(ஆ) உப பிரிவு – சபையின் தத்துவங்களைச் செயற்படுத்துவதற்கு நியாயமான வகையில் தேவைப்படற்பாலதான ஆட்கள்‚ ஒழுங்கமைப்புக்கள்‚ அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களிடமிருந்து தகவல்களைக் கோருதல்.
(இ) உப பிரிவு – அபாயகர ஒளடத துஷ்பிரயோக பரம்பல்‚ காரணிகள் மற்றும் சட்ட, மருத்துவ‚ சமூக‚ கலாசார மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கற்கைகளை பொறுப்பேற்று நடாத்துதல்.
• போதையூட்டும் ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்களின் போதையூட்டும் ஒளடத பாவனையின் பரம்பலையும் பண்பையும் தீர்மானித்தல்‚ போதையூட்டும் ஒளடத பாவனையின் போக்குகளையும் கோலங்களையும் கண்காணித்தல்‚ சனத்தொகையில் ‘ஆபத்தான நிலையிலுள்ள’ குழுக்களை அடையாளம் காணலும் முன்னெச்சரிக்கை முறைமையை அமுல்படுத்துவதற்கு ஆராய்ச்சிப் பிரிவு போதையூட்டும் ஒளடத துஷ்பிரயோக கண்காணிப்பு முறைமையை (DAMS) முன்னெடுக்கிறது.
• போதையூட்டும் ஒளடதங்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்காக கொள்கை வகுப்பாளர்கள்;‚ செயலாக்குநர்கள்‚ வேறு தேசிய மற்றும் சர்வதேச அமைப்பாண்மைகளுக்கு (UNODC/ WHO/ SAARC/ UNDP) போதையூட்டும் ஒளடத பாவனையும் போதையூட்டும் ஒளடதங்களும் சம்பந்தமான தகவல்களை வழங்குதலும் வெளியிடுதலும்.
• பொலிசாரினால் கைப்பற்றப்படும் போதையூட்டும் ஒளடதங்களைப் பாவிப்பவர்களின் புள்ளிவிவரங்களைத் திரட்டி பகுப்பாய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
• கொள்கை வகுப்புக்கும் செயற்படுத்தலுக்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை/ அரச சார்பற்ற அமைப்பாண்மைகளில்/ சிறைச்சாலைகளில் அபாயகரமான ஒளடதங்களைத் தடுத்தல்‚ சேய்மை‚ சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை மதிப்பீடுசெய்தலும் தொடராய்வு செய்தலும் ஊடாக கொள்கைகளைத் தயாரித்தல்.
• போதையூட்டும் ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு‚ ஐக்கிய நாடுகள் போதையூட்டும் ஒளடதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் பற்றிய அலுவலகத்திற்கு‚ உலக சுகாதார அமைப்பிற்கு‚ தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சம்மேளனத்துக்கு போதையூட்டும் ஒளடதங்கள் சார்ந்த தகவல்களை வழங்குதல்.
• தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை‚ ஐக்கிய நாடுகள் போதையூட்டும் ஒளடதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் பற்றிய அலுவலகத்தின் ஒத்தாசையுடன் ஒழுங்கு செய்யப்படும் சட்ட அமுலாக்க பயிற்சி நிகழ்ச்சி;த்திட்டங்களை செயற்படுத்தல்.
- வெளியீடுகளைப் பரிமாறிக்கொள்ளல்
- போக்குகளின் பகுப்பாய்வு
- தரவு முகாமைத்துவ முறைமையைப் பராமரித்தல்
- பயிற்சிச் செயலமர்வுகள் மூலம் அறிவைப் பகிர்தல்
- ஆராய்ச்சிக் கற்கைகளும் அளவாய்வுகளும்
- சர்வதேச ஒத்துழைப்பு