image

தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவு

இலங்கையின் நியதிச்சட்டத்திற்கும் சர்வதேச சமவாயங்களுக்கும் அமைய போதையூட்டும் ஒளடத துஷ்பிரயோகத்தின் பரம்பலைக் குறைப்பதற்கும் போதையூட்டும் ஒளடதங்களினால் ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைப்பதற்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கு உரித்தாக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவு உற்சாகமான பங்களிப்பை வழங்குகிறது. நாட்டிலுள்ள போதையூட்டும் ஒளடத பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு தடுப்பு‚ சமூக ஒருங்கிணைப்பு‚ பேண்தகு அபிவிருத்தி ஆகியன மீது கவனம் செலுத்தி போதையூட்டும் ஒளடதங்களுக்கான கேள்வியை குறைப்பதற்கு ஒப்பீட்டு மற்றும் பரந்த அணுகுமுறைகளுடன்கூடிய நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துகிறது. அதன்படி “நாம் பண்பித்தரமுள்ள கல்வியும் பயிற்சியும் ஊடாக போதையூட்டும் ஒளடத துஷ்பிரயோகம் குறைந்த‚ தடுக்கப்பட்ட‚ பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்குவதற்கு மனிதர்களுக்கு வலுவூட்டுகின்றோம்” என்ற தொனிப்பொருளை முன்வைத்து சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான ரீதியான மற்றும் தரமான தடுப்புக் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை வருடாந்தம் முன்னெடுக்கின்றோம். அதன்படி பிரதான ஆறு(6) நீரோட்டங்கள் வழியே இலங்கை முழுவதையும் உள்ளடக்குகின்றவாறு தமது அணுகுமுறைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


பாடசாலைகளை அடிப்படையாகக்கொண்ட போதையூட்டும் ஒளடதங்களின் தடுப்பு

போதையூட்டும் ஒளடதங்களின் தடுப்பை மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடிய ஒரு முக்கிய இடம்‚ பாடசாலையாகும். போதையூட்டும் ஒளடத துஷ்பிரயோகம் மீது கூடுதலாக ஈடுபாடுகொள்ளும் காலப்பகுதி பாடசாலைசெல்லும் வயதுப் பராயமாதலால்‚ அவ்வாறு ஈடுபாடு கொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக அமுல்படுத்த வேண்டிய சந்தர்ப்பமும் பாடசாலை செல்லும் காலப்பகுதியாகும். அதாவது இதற்கான மிகவும் வெற்றிகரமான தீர்வு யாதெனில்‚ தேசிய மட்டத்தில் அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்குகின்றவாறு அமுல்படுத்தப்படும் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட போதையூட்டும் ஒளடத தடுப்பு நிகழ்ச்சித்திட்டமாகும். பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட போதையூட்டும் ஒளடத நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தும்போது தீவிர கவனம் ஈர்க்கப்பட வேண்டிய ஒரு விடயம் யாதெனில்‚ நிகழ்ச்சித்திட்டத்தின் விளைதிறனாகும். இது பிள்ளையின் பாடசாலை காலப்பகுதியைப் பயன்படுத்தி அமுல்படுத்தப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சித்திட்டமாதலால்‚ நிகழ்ச்சித்திட்டம் பிள்ளை மீது நேர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தி எதிர்பார்த்த பெறுபேறுகளை நோக்கி நகரும் ஒரு நிகழ்ச்சித்திட்டமாக இருப்பது கட்டாயமாகும். போதையூட்டும் ஒளடத துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கு அவசியமான அறிவு‚ உளப்பாங்குகள்‚ திறன்கள்‚ பெறுமானங்களை பாடசாலை சமூகத்தின் மத்தியில் விருத்திசெய்து ஆரோக்கியமான‚ பாதுகாப்பான ஒரு பிள்ளைகள் சந்ததியொன்றை உருவாக்கும் நோக்கில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் ‘சிக்க்ஷா’ என்ற பெயரில் பாடசாலைகளை அடிப்படையாகக்கொண்ட போதையூட்டும் ஒளடத தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் பிரதான நான்கு கூறுகள் வழியே பாடசாலை முறைமையின் அனைத்துத் திறத்தவர்களையும் உள்ளடக்குகின்றவாறு ஒரு நீண்டகால வேலைத்திட்டமாக அமுல்படுத்தப்படுகிறது.

இளைஞர்களை அடிப்படையாகக்கொண்ட போதையூட்டும் ஒளடத தடுப்பு

பயனுறுதிவாய்ந்த போதையூட்டும் ஒளடத தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் இளைஞர்களுக்கு அறிவை தமதாக்கிக்கொள்வதற்கும் போதையூட்டும் ஒளடத பாவனையைத் தவிர்க்கும் உளப்பாங்குகளையும் திறன்களையும் அடைந்துகொள்வதற்கும் உதவுகிறது. இளைஞர் பரம்பரையில் முறிவுகளையும் வீழ்ச்சிகளையும் ஏற்படுத்தக்கூய எக்காரணியையும் வளர விடாமல்‚ ஒரு சமூகத்தை ஒரு நாடு என்ற ரீதியில் கவனத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற வழிகாட்டல்களையும் மதிப்புகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுடன் சரியான‚ ஏற்ற வழிகாட்டல்களை ஈடுபடுத்துவது முக்கியமானது. இளைஞர் பரம்பரையை அடிப்படையாகக் கொண்ட போதையூட்டும் ஒளடத தடுப்பில் மிக முக்கிய காரணியாக இளைஞர் சமூகத்தின் போதையூட்டும் ஒளடத பாவனை மீது தாக்கம் செலுத்தும் ஆபத்துக் காரணிகளையும் பாதுகாப்புக் காரணிகளையும் அடையாளம் காண்பதும் அவ்விடயங்களை நோக்காகக்கொண்டு அணுகுமுறைகளை மேற்கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும். அதன்படி ஆபத்துக் காரணிகளைக் குறைப்பதற்கும் பாதுகாப்புக் காரணிகளை வளர்ப்பதற்கும் அவசியமான குறுகியகால‚ நீண்டகால திட்டங்களும் தலையீடுகளும் ‘Future Gen.’ நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

குடும்பத்தை அடிப்படையாகக்கொண்ட போதையூட்டும் ஒளடத தடுப்பு

ஆய்வறிக்கைகளின்படி ஆளொருவர் போதையூட்டும் ஒளடத பாவனையில் ஈடுபடுவதற்கு குடும்பம் எனும் காரணி நீண்டகால அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக் காட்டப்படுகிறது. அதேபோல் போதையூட்டும் ஒளடதங்களிலிருந்தும்; ஏனைய பிற்போக்கான நடத்தைகளிலிருந்தும் தூர விலகி சரியான நடத்தைசார் ஆளொருவரை உருவாக்குவதற்கும் குடும்பம் முக்கிய ஒரு காரணியாக விளங்கும்;. அதன்படி திறன்களை அடிப்படையாக்கொண்ட குடும்பங்களை பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றின் ஊடாக பாதுகாப்பான‚ நேர்மறையான குடும்பக் காரணிகள் வளர்க்கும். அடிப்படையில் மேற்குறிப்பிட்ட பாதுகாப்புக் காரணிகளை வளர்த்து ஆபத்துக் காரணிகளை குறைப்பதற்காக இத்திறன்களை அடிப்படையாகக்கொண்ட குடும்பங்களை அடிப்படையாகக் கொண்ட போதையூட்டும் ஒளடத தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. பயிற்சி நிகழ்;ச்சித்திட்டங்கள் முதலிய நீண்டகால‚ குறுகியகால நோக்கங்களை அடைந்துகொண்டு நாடளாவிய ரீதியில் விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

பாரிய வேலைத்தளங்களை அடிப்படையாகக்கொண்ட போதையூட்டும் ஒளடத தடுப்பு

ஊழியர்களின் போதையூட்டும் ஒளடத பிரச்சினையானது தனிநபனின் வினைத்திறன்‚ மனோ திடம்‚ நிறுவனத்தின் விளைதிறன் என்பவற்றின் மீது பாதிப்புச் செலுத்தும். வேலைக்கு சமுகமளிக்காதிருத்தல்‚ வேலைகளை தாமதப்படுத்தல்‚ விபத்துக்கள்‚ சுகயீன லீவு‚ மேலதிக நேரப்படி செலுத்த நேரிடுதல் என்பற்றுடன் உற்பத்தி குறைவடைவதற்கும் காரணமாக அமையும். முகாமைத்துவத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுதல்‚ உபகரணங்களுக்கு சேதம் ஏற்படுதல்‚ ஊழியர்கள் மத்தியில் மோதல்கள் ஏற்படுதல்‚ பலவீனமான தீர்மானங்களை எடுத்தல்‚ நிறுவனம் பற்றிய புகழுருவுக்கு களங்கம் ஏற்படுத்தப்படல்‚ தனிமனித நடத்தைகள் சீர்கெடுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஊழியர்களின் போதையூட்டும் ஒளடத துஷ்பிரயோகம் காரணமாக ஏற்படுகின்றன. சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியரொருவரை உருவாக்குவதற்கு அந்நிறுவனத்திற்கு காலத்தையும் பெருந்தொகைப் பணத்தையும் செலவிட நேரிடுகின்றபோதும்‚ மேற்குறிப்பிட்டவாறு பயிற்றப்பட்ட ஊழியரொருவர் போதையூட்டும் ஒளடதங்களில் தங்கியிருப்பாராயின்; ‚ அது நிறுவனத்தை பாரிய பிரச்சினைகளுக்குள் தள்ளி விடும். தொழில்‚ படுபயங்கரமான விபத்துக்களில் 15%-30% அளவானவை அற்கஹோல் பாவனை காரணமாக ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதனடிப்படையில் தொழில்புரியும் இடங்களில் போதையூட்டும் ஒளடத துஷ்பிரயோகத்தில் ஈடுபடாதவர்கள் மீது அதிக பொறுப்புக்கள் சுமத்தப்படுவதைக் காணலாம். நிறுவனமொன்றை எடுத்துக்கொண்டால் அங்கு பெரும்பாலானவர்கள் போதையூட்டும் ஒளடத துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள் அல்லர். அவர்களை அதேநிலையில் வைத்திருப்பதற்கு யாதேனும் முதனிலை தடுப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை நிறுவனங்கள் ஆரம்பிக்க வேண்டும். அதனடிப்படையில்‚ நிறுவன மட்டத்தில் போதையூட்டும் ஒளடத தடுப்பு சார்ந்த கொள்கைகளை வகுப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஊழியர்களுக்கு கல்விசார் மற்றும் விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதுடன் போதையூட்டும் ஒளடத தடுப்பு மற்றும் அது சார்ந்த தலையீடுகளுக்கு அலுவலர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

• அரச அலுவலர்கள்
அவர்களின் நிருவாக முறைமையுடன் முழு நாட்டையும் அணுகும் சக்தியுள்ள நாட்டின் அரசதுறை முக்கிய செயற்பொறுப்பொன்றை ஆற்றுகிறது. போதையூட்டும் ஒளடத தடுப்பை அணுகுவதற்கான இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கும் அரச அலுவலர்களின் விளைதிறனை அதிகரிப்பதற்கும் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவினால் நாடுபூராவுமுள்ள கிராம அலுவலர்‚ சமுர்த்தி அலுவலர்‚ அபிவிருத்தி அலுவலர்‚ அரச துறையில் பணிபுரியும் ஏனைய வெளிக்கள அலுவலர்களுக்கு பலதரப்பட்ட விழிப்பூட்டல் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சமுதாய நிகழ்ச்சித்திட்டங்கள்

தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவு போதையூட்டும் ஒளடதங்களுக்கான கேள்வியைக் குறைக்கும் நோக்குடன் சமுதாயத்திற்கு போதையூட்டும் ஒளடத தடுப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துகிறது. கீழ் நிலையிலுள்ள சமுதாயத்தினருக்கு போதையூட்டும் ஒளடத கல்லவியை வழங்குவதன் மூலமும் அவை சார்ந்த பிரச்சினைகளை வெற்றிகரமாக முகாமை செய்யும்போதும் பயனுறுதிவாய்ந்த பெறுபேறுகள் அடையப்பெறுமென்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. போதையூட்டும் ஒளடதங்களை உபயோகிப்பவர்கள் மீது சமுதாயத்திலுள்ளவர்களுக்கு கூடுதலான தாக்கமொன்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். அதேபோல் அவர்களின் அங்கத்தவர்கள் பற்றிய சிறந்த புரிந்துணர்வொன்றிருப்பதால் அவர்களின் உளப்பாங்குகளை மாற்றுமளவுக்கு பலமொன்றுள்ளது.
பருப்பொருள்சார்ந்த பரீட்சார்த்தங்களுக்கும் பாவனைக்கும் மனிதர்களை ஈடுபடுத்தும் சூழற் காரணிகளையும் சமூக அழுத்தத்தையும்; குறைப்பது சமுதாய நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். இது தவிர சமுதாயம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்; நபர்களை போதையூட்டும் ஒளடதங்கள் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து தவிர்ந்திருப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்வுப் பாணியொன்றை ஊக்குவிப்பதற்கும் பலப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

கண்காட்சிகள்

போதையூட்டும் ஒளடத தடுப்புக் கண்காட்சிகள் என்பது காலத்தையும் கிரயத்தையும் பயன்கூர் விதத்தில் ஈடுபடுத்தி பாரியதொரு குழுவுக்கு செய்தியொன்றை விடுக்கும் ஒரு முறையாகும். இத்தகைய கண்காட்சிகளின்போது சுவரொட்டிகளும், பதாகைகளும் போதையூட்டும் ஒளடத தடுப்புச் செய்திகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன்‚ தகவல்கள் அடங்கிய பிரசுரங்கள் பொதுமக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஊடகங்களை அடிப்படையாகக் கொண்ட போதையூட்டும் ஒளடத தடுப்பு

வெகுசன ஊடகங்கள் பொதுமக்களுக்கு சில செய்திகளையும் தகவல்களையும் ஊடுகடத்தும் உந்துசக்தியாக உள்ளது. அதன் மூலம் மிகப் பெரியளவிலான ஒரு குழுவை ஒரே தடவையில் விளிக்கும் வாய்ப்புள்ளது. அதனடிப்படையில் சமூக ஊடகங்கள்‚ வெகுசன ஊடகங்கள் ஆகிய பிரதான தோற்றவடிவங்களினூடே ஒவ்வொரு துறை வழியே போதையூட்டும் ஒளடத தடுப்பு சார்ந்த தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சூழலை அடிப்படையாகக்கொண்ட போதையூட்டும் ஒளடத தடுப்பு போதையூட்டும் ஒளடத தடுப்பில் முக்கிய ஓரங்கமாக கொள்கை வகுப்பைச் சுட்டிக்காட்டலாம். இக்கொள்கைகளின் ஊடாக அவசியமான இடையீடுகளையும் வலுப்படுத்தல்களையும் மேற்கொள்வதற்கும் அவசியமான சட்ட கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் உறுதுணையாகும். அதனடிப்படையில் சூழற்காரணிகளை அடிப்படையாகக்கொண்ட போதையூட்டும் ஒளடத தடுப்பு வழியே போதையூட்டும் ஒளடத தடுப்பு சார்ந்த கொள்கை வகுப்பிற்கான இடையீட்டையும் போதையிலிருந்து விடுதலையடைந்த மாதிரி சூழல் நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், இந்நோக்கில் ‘ஒத்துணர்வு’ (ஸஹகம்பன) என்ற பெயரில் நீண்டகால நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

தடுப்பு இணைப்பாளர்கள்

 அலுவலரின் பெயர் பதவி நிலையம் /td> கையடக்கத் தொலைபேசி இலக்கம் மின்னஞ்சல் முகவரி
01 திரு. பிரதீப் கொஹொலகெதர AD தலைமை அலுவலகம் 071 4539835 koholanegedara@gmail.com
02 திருமதி பிரியதர்சனீ ரத்நாயக்க EIO தலைமை அலுவலகம் 071 5667669 Priya1980104@gmail.com
03 திருமதி குமுதுனி ஜயதிலக்க EIO தலைமை அலுவலகம் 077 2116877 kumuduni@nddcb.gov.lk
04 திரு. சாமர பிரதீப் EIO தலைமை அலுவலகம் 071 4847243 chamara.nddcb@gmail.com
05 திருமதி ஜே.ஏ.ஏ.டி.சந்திமா ஜயக்கொடி EIO தலைமை அலுவலகம் 071 8184343 Chandimajayakodi3@gmail.com
06 திரு. எம்.எம்.ரணசிங்க EIO தலைமை அலுவலகம் 071 8544442 hmranasinghe@nddcb.gov.lk
07 திருமதி இனுசா ஹெட்டியாரச்சி EIO புத்தளம் மாவட்டம் 071 9273243 076 6504402 inushahetti@gmail.com
08 திருமதி செவ்வந்தி ஜயகொடி EIO குருணாகல் மாவட்டம் 076 7448836 Ireshas2016@gmail.com
09 திருமதி திலினி வீரசேக்கர AEIO இரத்தினபுரி மாவட்டம் 071 8549291 077 1861903 Thiliniweerasekara07@gmail.com
10 சதிருமதி ஹர்ஷனி ஆரியரத்ன AEIO கம்பஹா மாவட்டம் 075 8288719 harshaniariyarathne@gmail.com
11 திருமதி சமலீ ஜீவந்தி AEIO களுத்துறை மாவட்டம் 075 8282541 076 1770684 Jeewanthi.bc@gmail.com
12 திரு. சுசிந்தன தசுன் AEIO தலைமை அலுவலகம் 071 4276369 sas.dasun@gmail.com
13 திருமதி இசுரிகா நதீஷானி AEIO காலி மாவட்டம் 071 6970229 Nadeeshanirathnayake1@gmail.com
14 திருமதி கே.எச்.மஹேஷி மதுஷானி AEIO கொழும்பு மாவட்டம் 071 8549283 076 5377724 maheshi.sheram@gmail.com
15 திரு. ரஷாட் AEIO அம்பாறை மாவட்டம் 076 7191119  mmgbmrashad@gmail.com 
16 திருமதி தில்ஹாரா வரகொட AEIO கம்பஹா மாவட்டம்   dilharawaragoda@gmail.com
17 திருமதி பிரியந்த ஹேவகே AEIO
18திரு. டப்ளியு.ஜீ.எஸ். உதான DEIA கொழும்பு மாவட்டம் 071 8555854 wgs.udana.123@gmail.com
19திருமதி சஹன்கி அல்விஸ் DEIA காலி மாவட்டம் 077 4736090 Sahangee.alwis@gmail.com
20 திருமதி எல்.ஏ.சி.விஜயரத்ன யாப்பா DEIAமாத்தறை மாவட்டம் 071 2187620 Lindaanupama1984@gmail.com
21 திருமதி சுரங்கி நாவலஹேவகே DEIA அம்பாந்தோட்டை மாவட்டம் 071 9069706 077 0152539 suranginawalahewage@gmail.com
22 திருமதி துல்ஷானி தாரகா DEIA கொழும்பு மாவட்டம் 071 4539844dmahanama1988@gmail.com
23 திருமதி டப்ளியு.எம். திருஷ்னிகா விஜேகோன் DEIA கண்டி மாவட்டம் 070 2027875 070 2187481 trishniyw@gmail.com

ஆய்வு அறிக்கைகள்

  1. கணக்கெடுப்பு அறிக்கை தடுப்பு கல்வி மற்றும் பயிற்சி பிரிவு டிசம்பர் 2024
  2. கணக்கெடுப்பு அறிக்கை தடுப்பு கல்வி மற்றும் பயிற்சி பிரிவு பிப்ரவரி 2024
  3. கணக்கெடுப்பு அறிக்கை தடுப்பு கல்வி மற்றும் பயிற்சி பிரிவு மார்ச் 2024
  4. கணக்கெடுப்பு அறிக்கை தடுப்பு கல்வி மற்றும் பயிற்சி மே மார்ச் 2024
  5. கணக்கெடுப்பு அறிக்கை தடுப்பு கல்வி மற்றும் பயிற்சி ஜூன்மார்ச் 2024new

பதிவிறக்கங்கள்

  1. போதைப்பொருள் தடுப்புக்கான அறிவியல் விளக்கம் new
  2. URC RECOVERY ALLIES new
  3. இரண்டு போதைப்பொருள் தடுப்பு பட்டறைகள்new


டிஜிட்டல் யோசனைகள் - இங்கே சொடுக்கவும் Click here