சபையினால் முன்னெடுக்கப்படும் சிகிச்சையளிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் காம் ஒரு வருடத்திற்குக் கூடுதலாகும். வதிவிட சிகிச்சைகளைப் பெறுவதற்கு இரண்டு மாத காலம் நிலையத்தில் சேவைநாடுநர்கள் தங்கியிருக்க வேண்டும். அதனடிப்படையில் கொடுப்பனவுகளுடன் சேவைநாடுநர்களை உட்படுத்திக்கொள்வதற்கு 14 நாள் சிகிச்சையளிப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றும் அமுல்படுத்தப்படுகிறது. வதிவிட காலம் முடிவடைந்ததும் சேவைநாடுநர் மீண்டும் போதையூட்டும் ஒளடத பாவனையைத் தடுப்பதற்கான நிகழ்ச்சித்திட்டத்தில் இணைவார். சேவைநாடுநரின் குணமடையும் செயன்முறைக்கு உதவுதலும் சிரமமான உணர்வுகளை முகாமை செய்துகொள்வதற்கு உதவியளிப்பதற்கு இங்கு சேவைநாடுநரின் பெற்றோர்/ பாதுகாவலர்களும் உற்சாகமாக பங்கேற்கச் செய்யப்படுகின்றனர்.
வதிவிட நிகழ்ச்சித்திட்டத்துக்கு சாதாரண வாழ்வுப் பாணிகளுக்கு அமைவான செயற்பாடுகளும் அனுபவங்களும் இரசனையுணர்வை தீவிரப்படுத்தும் செயற்பாடுகளும் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வொன்றைக் கழிப்பதற்கு விளையாட்டு அப்பியாசங்கள், யோகாசனம் போன்ற செயற்பாடுகள்‚ உயர் மன ஆரோக்கியமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு உளவிய் ஆலோசனைகள்‚ நினைவிற்கொண்டு செயலாற்றுவதற்கான செயற்பாடுகளையும் (mindfulness activities) ஆன்மிக நலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எளிய மத செயற்பாடுகளையும் கூட்டுணர்வின் ஊடாக வெற்றிபெறுதல்‚ வெற்றி-தோல்வி எதையும் ஒருசேர ஏற்றுக்கொள்வதற்குப் பழக்கும் செயற்பாடுகள்‚ தமது திறமைகளை மெருகேற்றிக்கொள்வதற்கான செயற்பாடுகள் உள்ளிட்ட போதையூட்டும் ஒளடத பாவனையிலிருந்து ஆளொருவரை விடுவித்துக்கொள்வதற்கு உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மட்டத்திலான உயர் செயற்பாடுகளை உள்ளடக்கிய விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன.
குழுநிலை ஆலோசனை‚ தனிநபர் ஆலோசனை மற்றும் குடும்ப ஆலோசனை தேவைக்கேற்ப அமுல்படுத்தப்படுகிறது. மேலும்‚
போதையூட்டும் ஒளடத சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்புக்கான 04 நிலையங்கள் தற்போது சபை வசம் உள்ளன. இந்நிலையங்கள் மூலம் அடிப்படை வசதிகளுடன் துப்புரவான தங்குமிடங்கள்‚ சமநிறை உணவுவேளை ஆகிய அடிப்படைத் தேவைகள் சேவைநாடுநர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோல் சிறந்த பயிற்சியுடன்கூடிய உயர் கல்வியுடன்கூடிய நட்புறவான பணியாட்குழுவினால் ஆலோசனை நடவடிக்கைகளும் நிருவாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொருவரது சிகிச்சையளிப்புத் தேவைகள் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படுகின்றன. அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட சிகிச்சயைளிப்புத் திட்டமொன்றின்படி எதிர்வரும் வதிவிட சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்புக் காலத்தில் சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது வதிவிட காலத்திற்குப் பின்னரும்கூட அமுல்படுது;தப்படும் ஒரு நீண்டகால சிகிச்சையளிப்புத் திட்டமாக இருப்பதுடன், சேவைநாடுநர் நிலையத்திலிருந்து உரிய காலத்தின்படி வெளியேறிய பின்னரும் மாதாந்த தொடராய்வு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடாத்தி சேவைநாடுநரின் குடும்ப உறுப்பினர்களுடனும் தொடர்பைப் பேணி சிகிச்சையளிப்புச் செயன்முறை மிகவும் பயனுள்ளதாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பிரிவின் முக்கிய பொறுப்பு இலங்கையில் உள்ள தனியார் மற்றும் நியமிக்கப்பட்ட சிகிச்சை மையங்களின் மருந்து சிகிச்சை முறை மற்றும் மறுவாழ்வு செயல்முறைகளை கண்காணித்து உதவுதல்.